Friday, November 29, 2013

கால இடைவெளி

மலைகள் பார்பதற்கு நிலையானதாக, அமைதியாக இருப்பது போல தோன்றும்.
ஆனால் எல்லா நேரமும் அவைகள் மாறிக் கொண்டே இருக்கும்.
நாம் அதை பார்த்த பிறகும் கூட மாற்றத்தை பார்த்ததாக நம்முள் ஒரு விழிப்புணர்வு இருக்க முடியாது.
உடனடியான பார்வைக்கும், உடனடியான விழிபுனர்வுக்கும் இடையே கால இடைவெளி உள்ளது.
சில நேரங்களில் நாம் கால இடைவெளி முக்கியமில்லை என்று நினைப்போம், ஆனால் கால இடைவெளி முக்கியமானது இல்லை என்கிற சிந்தனையை நியாயப்படுத்த எதுவுமில்லை.

Thursday, November 28, 2013

தரம்

இரண்டில் ஒன்று நன்றாக இருக்கிறது என்று கூறக் காரணம் எதுவாக இருந்தாலும், அதுவே தரம் எனப்படும்.
தரம் சிறிய கவனிக்க முடியாத ஒரு கோடுதான்;
பிரபஞ்சம் என்கிற கோட்பாட்டில் தர்கரீதியற்ற கோடு இது.
நாம் தரத்தை பிரித்தால் நியாயம் தான் கிடைக்கும்,
தரம் இல்லாமல் இருக்கும் ஒன்று தான் நியாயத்தின் சாராம்சம்.

Wednesday, November 27, 2013

போதிக்கும் வழி

கவராயம் இல்லாமல் ஒரு பரிபூரன வட்டம் வரைவது அசாத்தியம், மிகவும் கவனமாக, கோட்டு வரைபடக் கலையின் நியதியை நிணைவுகூர்ந்து முயன்றாலும் சரி.
ஒரு ஜென் குரு அப்படி வரைவார்; அல்லது ஒரு வடிவகணித வகுப்பில் போகிறபோக்கில் அப்படி வரைகிற ஆசிரியரும் உண்டு.
இரண்டுமே நீரில் அலையையும் அசைவையும் எழுப்பாமல் இறங்கும் இரகசியம்தான்,
இந்த இரகசியத்தை யாராலும் யாருக்கும் கற்றுத்தர முடியாது,
சொற்கள் இல்லாமல் போதிப்பதை தவிற.

Tuesday, November 26, 2013

என் சொற்கள்

என் சொற்கள் தெரிந்துகொள்ள எளிதானவை;
அவை செயல்படுத்தவும் எளிதானவை,
என்றாலும், மக்கள் எவருக்கும் என் சொற்கள் தெரியாது.
மேலும், யாரும் அவற்றைச் செயல்படுத்துவதுவுமில்லை.
ஏனென்றால், அவர்கள் அறிவைப் பெற்றிருப்பதால் அவர்கள் என்னை அறிந்துகொள்வதில்லை.

பெண்மை

பெண்மை ஆண்மையை எப்பொழுதும் வெல்கிறது,
சலனமின்மை என்கிற உபயத்தால் தன்னை தாழ்த்திக்கொண்டு.

Monday, November 25, 2013

என் விருப்பம்

நான் விரும்புவது எது என்று எனக்கு தெரிந்து கொள்வது முடிவிலியாக உள்ளது!
ஏன் என்றால், என் மனம் நான் விரும்புவதை வெளிக்காட்டாமல் தடுத்து இருத்தலின்மையல் வரும் குழப்பங்களில் இருந்து என்னை வெளிக்கொனர்ந்து விடுகின்றது.
இந்த மன ஆக்கிரமிப்பினை நானும் ஆனந்தமாக சில உன்னதங்களில் அனுமதிப்பதுண்டு,
இதை நான் அனுமதிப்பதனால் என்னுள் சில பயனுள்ள பாத்திரங்கள் உருவாகின்றன என்று என் மனம் நினைத்து, என்னுள் என் விருப்பங்களை எனக்குத் தெரியாமல் வலுப்புற செய்து விடுகின்றது.

Thursday, November 21, 2013

தத்துவம் ~ 3

நாம் என்னவாக ஆகிறோமோ, அதை ஏற்றுகொள்ளத்தானே வேண்டும்! ஏன் என்றால்,
நாம் ஏற்றுக்கொண்டது நம்மை தானே தவிற,
நம்முடைய  மனபிம்பமோ அல்லது செயற்கையாக அமைந்ததோ கிடையாது.
அது நமக்கு இயற்கை கொடுத்துவரும் ஒரு நியதி ஆகும்.

Monday, November 18, 2013

இறந்த தியாகி ???

ஒரு தியாகியாகிச் சாவதென்பது சமூகத்தின் ரத்த நாளங்களில் ரத்தத்தை ஏற்றுவது என்பதாகும்.

தத்துவம் ~2

பெரிய அலை வரும்போது, உன் தலையை தாழ்த்தி, அது கடந்து செல்ல விடு.

Friday, November 15, 2013

வசந்த காலம்...

அது வசந்த காலம் என்பதை யாரும் சொல்ல தேவையில்லை.
சுற்றுச்சூழல் எல்லாமே பார்க்கப் புத்தம் புதியதாகவும்,
பளபளப்பாகவும், உயிரோட்டத்துடனும் இருந்தது.
அதுதான் வசந்தம்.

Thursday, November 14, 2013

ஹைக்கூ

பனிக்கட்டிகள் உறுக ஆரம்பித்தன
திடீரென முழுக்க முழுக்க கிராமமே
குழந்தைகளால்! நிரம்பி வழிந்தது

Tuesday, November 5, 2013

சிட்டு குருவி

சிட்டு குருவி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்னும் ஆர்வமுடயது. காட்டிலே எந்த மூலையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதன் கண்ணில் பட்டே தீரும். அது சம்பவம் நடைபெறும் இடத்தில் சென்று ஒய்வொழிவில்லாமல் கூக்குரல் எழுப்பி கொண்டே இருக்கும். தான் கண்ட செய்தியை காடு பூராவிற்கும் தெரியும் வரை சும்மா இருக்காது. அது காட்டில் மறைந்திருக்கும் திருடர்களை பிடித்து தரும், காணாமல் போகும் வளர்ப்பு பிராணிகளின் இருப்பிடத்தை தெரிவிக்கும்.

ஓரோர் நேரம் அது எல்லை மீறிய ஆர்வமும் காட்டும். முயலுக்ககவும், நரிகளுககவும் போட்டிருக்கும் வளையை பார்த்து, தனது இயற்கையான ஆர்வத்தில் அதை சுற்றி திரிந்து, கடைசியில் தானே அந்த வளையில் சிக்கி உயிர் விடுவதும் உண்டு.

உண்மை

விருப்பமில்லாத உண்மை பிரம்மையாகவும்,
விருப்பமான பிரமை உண்மையாகவும் மனிதனுக்கு தெரிவது சகஜம்.

Monday, November 4, 2013

அறிவு

தேடலில் ஒரு திருப்பம் வந்ததுமே, மனிதன் தன் கடமையை மறந்து விழுந்து விடுவதும்,
பிறகு கடமை நினைவுக்கு வந்ததுமே தன் தேடலை மீண்டும் தொடங்குவதுமே அறிவு வந்தது என்கிறோம்.

காடு

காடு  இரகசியமானது,
எந்த அனுபவத்திற்கும்,
எப்படி பட்ட அறிவிற்கும் புரியாத இரகசியங்கள் அங்கே பலவும் உள்ளன.

காடு எவ்வளவு விந்தையானதென்றால்,
அதன் இரகசியங்கள் அதற்கே தெரியாது போலும் என்று கூறுமளவிற்கு பெரும் விந்தையானது.