Thursday, January 16, 2014

மனிதனின் எண்ணங்கள்

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளில் அவன் மனதில் சுமார் அறுபதாயிரம் எண்ணங்களை ஓடவிடுகிறான்! இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மனதில் எழும் எண்ணங்களில் தொன்னுற்றைந்து விழுக்காடு ஏற்கனவே சிறகை விரித்து அவன் மனதில் கட்டின்றி ஓடிய எண்ணங்கள் தான்.

நாம் நம் மன எண்ணங்களை கட்டுப்படுத்தினால் எதை எல்லாம் வெல்லமுடியும் அல்லது ஆழமுடியும்?
நம் குழந்தைகளையா! அல்லது காலநிகல்வுகளையா இல்லை இந்த பாழாய்ப்போன வாகன நெறிசலையா? இல்லை, அனால் நாம் இவற்றின் மீது செலுத்தும் நம் என்ன ஆளுமையை மாற்றமுடியும், இதுதான் நம்மை மனிதனாக்குகிறது அல்லது மனிதனாக மற்றவற்றிடமிருந்து பிரிக்கின்றது.

மன என்னகளின் ஆளுமை நம்மை முழுவதுமாக ஒரு பெரிய மனிதன் ஆக்கிவிடும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் அல்லது இதை ஒரு குட்டிக் கதை என்று கூட எதுத்துக்கொல்ளலாம். சமிபத்தில் நான் என்னுடைய நண்பனின் ஆசிரியரை காணநேர்ந்தது, அவர் அடிக்கடி ஒன்றை தவறாமல் கூறுவார் அது என்ன என்றால் "Your  'I Can' is more important than your 'I.Q' "[அவர் ஒரு ஆங்கில ஆசிரியர்]. அவர் வேலை செய்த பள்ளி ஒருநாள் திடீரென தீப்பிடித்து எறிந்து விழுந்தது, அப்பொழுது எல்லாரும் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்று நின்றிருந்தனர். அந்த நேரத்தில் அவர் அணைத்து பெற்றோர்களையும் அழைத்து என்ன கூறினார் என்றால் "நமக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது, இனிமேல் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி எந்த ஒரு அபாயமும் இன்றி அழகாக உருவாகப்போகின்றது, மேலும் நல்ல மேசைகள் மற்றும் புதிய அமரும் இருக்கைகள் கிடைகப்போகின்றன, ஏனென்றால் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு புதிய மற்றும் அழகான பள்ளியை உருவாக்கப்போகின்றோம்" என்று கூறி, பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் கூறி அவர்களுக்கு புதிய புத்துனர்ச்சியை  ஊட்டி குழந்தைகளுக்கு ஒரு அழகான தரமான பள்ளியை உருவாக்கினார்.

நாம் வாழ்வில் என்ன நடந்தாலும் சரி, நமக்கு நம்முடைய எண்ணங்களினால் அவற்றை சாரிசெய்யும் ஆற்றலை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். இதுவே இயற்கை விதியின் உச்சம் ஆகும். ஏனென்றால் நம் புறஉலகம் நம்மின் ஆழமன எண்ணத்தையே பிரதிபலிக்கும். நம்முடைய எண்ணங்களை கையாள்வதின் மூலமாக நாம் வாழ்வின் அம்சங்களும் வாழ்வின் குறிக்கோளும் செம்மையடையும் .

என் நண்பனின் ஆசிரியர் எனக்கு கூறிய தகவல்களின் சிறு பிரதியை மொழி பெயர்க்காமல் எழுதுகிறேன் [மொழி பெயர்த்தால் அவர் கோபப்படுவார்].
" 'There is nothing noble about being superior to some other person. True nobility lies in being superior to our former self'. All I'm really getting at is that if we want to improve our life and live with all that we deserve we must RUN OUR OWN RACE. It doesn't matter what other people say about us. what is important is what you say to yourself. Do not be concerned with the judgement of others as long as you know what you are doing is right. you can do whatever you want to do as long as it is correct according to your conscience and your heart never be ashamed of doing that which is right, decide on what you think is good and then stick to it. And for god's sake, never get into the petty habit of measuring your self-worth against other people's net worth. Every second you spend thinking about someone else's dreams you take time away from your own.' "