Friday, December 27, 2013

பெரியவர்கள்

சில பேர்தான் பெரியவர்கள்!
வயதானவர்களெல்லாம் பெரியவர்கள் இல்லை!
யார் நல்வார்த்தை சொல்லுகிறார்களோ அவர்கள் தான் பெரியவர்கள், மீதம் உள்ளவர்களெல்லாம் இரும்புக் கோட்டையிலுள்ள ஓல்டு பேண்டிகுட் (old bandicoot) என்று சொல்லப்படும் பழம் பெருச்சாளிகள். அவர்கள் புதிதாக வருபவர்களின் வாழ்க்கை எனப்படும் மூட்டையை எடை குறைப்பதாகக் கூறி, அவர்களுடைய ஆற்றலை அந்த மூட்டையிலிருந்து முழுவதும் உண்டு, கடைசியில் புதியவர்களை கிழிந்த கோனியாக்கி, எதற்கும் உதவாமல் செய்துவிடுகின்றனர்.

Monday, December 23, 2013

அராத்தே

'அராத்தே' என்பது போதுவான சொல், அதற்கு சிறப்பு என்று மட்டுமே பொருள். 'அரத்தே' என்பது வாழ்க்கையின் முழுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு ஒரு மரியாதையை உள்ளடக்கியது. தனித்துறை ஒன்றில் மட்டும் சிறப்பதில் இல்லை குறிப்பிட்ட ஒரு துறையில் ஆற்றல் என்பது இல்லாமல் வாழ்கை முழுவதிலுமாக இருக்க வேண்டும்.

வடிவங்களும், உடல் அசைவுகளும் - உயர்தவர்களால் வெருக்கப்பட்டவை, கீழானவர்களால் விரும்பப்பட்டவை. ஆண்டு தோறும், முதல்வரிசையில் அமரும் மாணவர்கள், பிறரைப்போல நடிப்பவர்கள், அழகான புன்முறுவலும், சீரான பேனாக்களும் வைதுக்கொண்டு அந்தத் துறையில் அதிக மதிப்பெண் வாங்குவதும் உண்மையான 'சிறப்பு', "அரத்தே" உள்ளவர்கள் கடைசி வரிசையில் அமைதியாக அமர்ந்து இந்தப் பாடம் பிடிக்காததற்கு தங்களிடம் என்ன தவறு இருக்கும் என்று குழம்பிப் போயிருப்பதும் சாதாரணம்.

Friday, December 20, 2013

பழகிய பாதைகள்

நன்றாக தெரிந்த வேலை செய்வதும் ஒரு அழகுணர்ச்சி, நன்றாக தெரியாத வேலையைச் செய்வதும் ஒரு அழகுணர்ச்சி. இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் முதலாவது, உற்பத்தியாளர்கள் - இவர்கள் நாசுக்கான அமைப்பை விரும்ப மாட்டார்கள், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்கள். இரண்டாவதாக, பராமரிப்பாளர்கள் - இவர்கள் ஒரே மாதிரியான வேலையைத் திரும்பச் செய்வதை வெறுப்பவர்கள். இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் மாற்று இல்லை. நான் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். அதனால் தானோ என்னவோ பிரச்சனைகளைத் தீர்க்கும் வேலைகளைச் செய்வதில் மற்றவர்களை விட அதிகமாக மகிழ்ச்சி கொள்கிறேன். அது போல மற்றவர்களை விட சுத்தம் செய்வதை அதிகமாகவே வெறுக்கிறேன். ஆனால் செய்ய வேண்டுமென்றால் மற்றவர்களைப் போல என்னால் இறன்டும் செய்ய முடியும். நான் சுத்தம் செய்வது எப்படியென்றால் மக்கள் கோவிலுக்கு போவது போல - அதாவது புதிதாகக் கண்டுபிடிப்பதற்கு எதுவும் இல்லை. நான் புது விஷயங்களில் மிகவும் உஷாராக இருந்தாலும் கூட ஏற்கனவே பழக்கப்பட்டதுடன் மீண்டும் பழக்கப்பட்டுக் கொள்வேன். பழகிய பாதைகளில் செல்வது சில சமயங்களில் நன்றாக இருக்கும்.

Thursday, December 19, 2013

நான் எப்படி எழுதவேண்டும்?

நான் எழுதுவது எப்படி இருக்க வேண்டுமேனில், அது முழுவதும் வித்யாசமான ஒரு புதிரான நடையாகவும், படித்தவற்றிலேயே மிகவும் பொருள் மயக்கம் தரும் புரியாத நடையாகவும், வாக்கியங்கள் எல்லாம் எழுவாய் ஒரு இடத்தில் இருந்தால் பயனிலையும் தொலைதூர இடைவெளியில் இருக்க அவை ஒரு கலைக் களஞ்சியம் போலவும், எதிர்பாராத இடங்களில் வாக்கியங்களுக்குள் வாக்கியங்கள் நுழைக்கப்பட்டு, வாசகர் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் முற்றுப்புள்ளி வருவதற்கு முன்னரே முதல் பகுதி மறைந்து போய்விடவேண்டும். இவற்றையெல்லாம் விட, சிறப்புப் பொருள்களைத் தாங்கி நிற்கும், அறிவிற்கு எளிதில் பிடிபடாத கருத்துக்கள் பெருகி இருக்கவேண்டும். அதன் பொருட்கள் கூறப்பட்டிருக்கக் கூடாது. அதன் உட்பொருளை நாம் ஊகித்துத்தான் உணர வேண்டும். இப்படிக் குழப்பமான கருத்துக்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று வேகமாகவும், நெருக்கமாகவும் அடுக்கப்படவேண்டும்.

என்னுடைய எண்ணங்கள் வெகுவாகப் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. பெரிய சுரங்கப் பாதைகளுள்ள கோட்டைகள் நீண்டு கொண்டே போவது போல, என் எண்ணங்களும் குழப்பம் தரும் வாதங்களால் சூழப்படிருக்கின்றன. கடைசியில் எந்தக் கருத்தை நான் இப்படிக் காவல் காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கண்டுபிடிப்பதே முடியாமல் போய்விடவேண்டும். ஓர் அறையில் பெரிய விவாதம் நடந்து, அப்போதுதான் முடிந்திருக்கின்றது. நீங்கள் உள்ளே போகிறிர்கள், எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள், யாரும் பேசவில்லை. ஒன்றும் புரியாதல்லவா? அதுபோன்ற புரியாத தன்மைதான் என் எண்ணங்களும்.

Wednesday, December 18, 2013

மதிப்பாய்வு

நம்மளைப் பற்றிய மதிப்பாய்வு நம்மிடம் அதிகமாக இருக்கும்போது புதிய விபரங்களை அங்கீகாரம் செய்யக்கூடிய நம் திறமை குறைந்துவிடும் தர மெய்மையிலிருந்து நம்முடைய கர்வம் நம்மைத் தனிமைப்படுத்திவிடும். நாம் கோட்டைவிட்டு விட்டோம் என்று விபரங்களை காண்பிக்கும் போது நாம் அதை பெரும்பாலும் ஒத்துக் கொள்ள மாட்டோம். பொய்யான தகவல்கள் நம்மை நல்லவர் என்று காட்டும் போது, நாம் அதை விரும்பக்கூடும்.
பதற்றம், இது அறிவுக்கூர்மையின் அடுத்த பொறி. கர்வத்திற்க்கு எதிர் மறையானது. எது செய்தாலும் தவறாக செய்வோம் என்று உறுதியாக இருப்பதால் எதுவொன்றை செய்வதற்கும் பயப்படுவோம். "சோம்பேறித்தனத்தை " விட இது தான் நாம் ஒரு காரியத்தை ஆரம்பிப்பதை தாமதப்படுத்தும். அறிவுக்கூர்மையின் பொறியான பதற்றம் என்பது அளவுக்கு அதிகமான உத்வேகத்தினால் ஏற்படுவது, இதுதான் எல்லாவிதமான தவறுகளுக்கும் இட்டுச் செல்லும். எது சரி செய்யத் தேவையில்லையோ அதை சரி செய்வோம, கற்பனையில் உண்டான நோயை தொடர்ந்து கொண்டிருப்போம். நம்முடைய காட்டுத்தனமான முடிவுகளினால், பதற்றத்தினாலும் எல்லா வகையான தவறுகளையும் நம் வாழ்வில் உருவாக்குவோம். இந்தமாதிரியான தவறுகள் நேரும்போது அது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டதை உறுதிப்படுத்துவதாக அமையும். இது அதிக தவறுகளுக்கும் காரணமாக இருந்து நம்மை இன்னும் தாழ்த்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும்.

Tuesday, December 17, 2013

む (ம்யூ)

ம்யூ என்றால் "ஒன்றுமில்லை" என்று பொருள். "தர"தைப் போல இதுவும் இரட்டைத்தண்மை வேறுபடுத்தலுக்கு வெளியே உள்ள செயல்முறையைத்தான் குறிப்பிட்டுக் காட்டுகிறது. சாதாரணமாக ம்யூ என்றால், "பிரிவு இல்லை, ஒன்று இல்லை, ஆம் கிடையாது, இல்லை கிடையாது". அது சொல்வது என்னவென்றால் கேள்விக்கு பதிலாக ஆம் அல்லது இல்லை என்று இருந்தால் அது தவறு. அந்த மாதிரியான கேள்வியைக் கொடுக்கக்கூடாது இது சொல்வது என்னவென்றால் "கேள்வியைக் கேட்காமல் விடு" என்பதுதான்.
சூழ்நிலைவாதக் கேள்வி மிகவும் சிறிதாக இருக்கும் போது, அதனுடைய பதில் அதற்கேற்ற மாதிரி இருக்கும் அந்த நேரத்தில் ம்யூ மிகவும் சரியான சொல்லாகும். ஜென் குரு ஒருவரிடம் நாயிடத்தில் புத்தரின் இயல்பு இருக்கிறதா என்று கேட்டார்கள் அதற்கு அவர் ம்யூ என்றார். இதற்கு அர்த்தம் என்னவெனில் அவர் எப்படி பதில் சொன்னாலும் அது சரியானது இல்லை என்பதுதான். புத்தரின் இயல்பை ஆம் அல்லது இல்லை என்கிற கேள்வியின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது.
ம்யூ பதில் தரக்கூடிய எந்த பரிசோதனைகளையும் குறைவாக மதிப்பீடு செய்வது நியாயமற்றது.
ம்யூ பதில் மிகவும் முக்கியமான ஓன்றாகும். இயற்கையின் பதிலுக்கு விஞ்ஞானியின் கேள்விக்கான சூழ்நிலை மிகவும் சிறியது என்றும் கேள்விக்கான சூழ்நிலையை அவர் கொஞ்சம் விசாலமாக்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. இது மிகவும் முக்கியமான பதில் ஆகும். இயற்கை பற்றிய அவருடைய புரிதல் இதனால் பெரும் அளவில் மேம்பட்டது. இந்தப் பரிசோதனையின் முதல் குறிக்கோளே அதுதான். அறிவியல் ஆம்-இல்லை என்கிற பதில்களை விட ம்யூ பதில்களால் தான் அதிக வளர்ச்சியடையும் என்கிற வலுவான கூற்றை இதன் மூலம் உருவாக்கலாம் . ஆம்-இல்லை என்கிற பதில்கள் அனுமானத்தை உருதிப்படுத்தும் அல்லது நிராகரிக்கும் ஆனால் பதில் இதற்கும் அப்பால் இருக்கின்றது  என்று ம்யூ கூறுகிறது. ம்யூ ஒரு "கவனிக்கப்படவேண்டிய நிகழ்வு" முதலில் அது அறிவியல் பூர்வமான விசாரணைக்கு ஊக்கமளிக்கக்கூடியது ஆகும். இது மர்மமானதோ அல்லது சிலருக்கு மட்டுமே புரியக்கூடியதோ அல்ல. நம்முடைய பண்பாடு இது குறித்து குறைவாக எடைபோடும் படி ஆக்கிவிட்டது.

Monday, December 16, 2013

விட்டுவிட்டேன்

இதை உதறிவிட்டேன், அதை விலக்கிவிட்டேன் என்று பேசிக் கொண்டிருபவர்கள் எதையும் உதற முடியாது. எதனிலும் விலக முடியாது.
விட்டதை விட்டுவிட்டு, விட்டேன் என்ற நினைவையும் விட்டுவிட்டுச் சும்மா இருத்தலே விட்டுவிட்டதற்கு ஒப்பாகும்.

அது

எல்லா சக்திகளிலும் பலமும், அதே சமயம் மேன்மையும் கொண்டது அது. உலகத்தின் எல்லா பொருள்களுக்கும் பிறப்பிடம். மண்ணிலுள்ள உயிர்களுக்கு தெய்விகமான விதிகளை அளிக்கிறது அது. உயிர்வாழும் எல்லாப் பிராணிகளுக்கும் இந்த விதிகளுக்குப் பணிந்துதான் ஆகவேண்டும். மனிதர்களின் முரட்டுப் புலன்களை மாற்றி பரிசுத்தமாக்குகிறது அது. மன்னர்கள், மக்கள் இவர்களின் செயல்களையும் பழக்கங்களையும் தூய்மைப் பதுத்துகிறது. பாலும் இரத்தமும் மண்டிய உலகில் சகோதர அன்பையும் தர்மத்தையும் பரப்பி சேவையில் பெருமையையும் காணச் செய்கிறது அது. யுத்தப் புகழும் ஆயுதப் பயிற்சியும் இந்த நற்பண்புகளை மனிதனுக்கு அளிக்காது. அந்த தெய்விக சக்தியால் இந்த உலகமானது அன்பும் அழியா அமைதியும் உறையும் இடமாக மாறிவிடும்.

Thursday, December 12, 2013

கழுகின் விமோசனம்

மனித சிந்தனை சாதிப்பது மிக மிகக் குறைவு. அதன் இறக்கைகள் பலம் கொண்டவைதாம். ஆனால் அவற்றை நமக்கு அளித்த விதியைப் போல பலம் உள்ளவை அல்ல. தான் விரும்பியதற்கு அப்பால் நம்மை போக விடாது அது. நம் வாழ்கை பிரயானமானது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குறுகிய கால அலைச்சலில் நமக்கு இன்பமும், நம்பிக்கையும் உண்டாகின்றன. ஆனால் பருந்துக்காரர், கையிலுள்ள சங்கிலியால் பருந்தை இழுத்துக்கொள்வது போல நாமும் இழுத்துக்கொள்ளப்படுகிறோம். நாம் எப்போது சுதந்திரமடைவோம்? இந்தச் சங்கிலி என்று அறுபட்டு பரந்து வான்வெளியில் சுயேச்சையாக பறக்கும் அது?

பறக்குமா, பறக்காத? வாழ்க்கையின் இரகசியமே இந்த பந்தம் தானா? இது மாறி விட்டால் நாமும் மனிதர்களாக இருக்க மாட்டோம். நம்முடைய விதியே மாறிவிடும்.

ஆனாலும் எப்பொழுதுமே நாம் ஆகாச வெளியின் மயக்கில் கட்டுண்டு கிடக்கிறோம். அதற்கே உரியவர்களாக நம்மை நினைத்துக்கொண்டு விடுகிறோம். ஏதோ சத்தியம் போல அது தன்னைத் தானே நமக்கு முன் கண்பிதுக்கொள்கிறது.

நாம் அடைய முடியாத இந்த எல்லையற்ற வான்வெளி எதற்காக நம்மையும், நம் வாழ்வையும் சுற்றியுள்ள இந்த எல்லையில்லாத பரப்பின் அர்த்தம் என்ன? இதற்கிடையேயுள்ள நாம் ஏன் கையாலாகாத கைதிகளாக இருக்கிறோம்? ஏன் வாழ்க்கை தனக்குள் தானே சிறைபட்டுக் கிடக்கிறது? இந்த எல்லையில்லாத பரப்பினால் நமக்கு இன்பம் உண்டா? இல்லை என்றே தோன்றுகிறது. இன்பத்தை விட துன்பமே அதிகம்.

சத்தியத்தை தேடுகிறோம் என்பதற்காக நமக்கு சுகம் கிடைக்கிறதா? எனக்குத் தெரியாது. நான் தேடத்தான் தேடுகிறேன். என் வாழ்வு முழுவதும் ஓயாமல் தேடிக் கொண்டிருக்கிறேன். சில சமயம் நான் அதை கண்டுவிட்டேன்போல் தோன்றுகிறது. ஆனால் அதனுடைய எல்லையில்லாத ஒளி என் கண்ணை இன்னும்  நிரப்பவில்லை. நிரபினால் தான் நமக்கு எதுவும் நன்றாகப் புரியும். நாம் அதற்கு கொடுத்து வைக்கவில்லை. ஆகவே முயற்சிகளெல்லாம் வீண்தான். நான் தொட்டதெல்லாம் சிறிதளவு உண்மையாகவும் அரைகுரையாகவுமே இருக்கின்றன, என்னுடைய சிருஷ்டிகளை நினைக்கும்பொழுதே எனக்குத் துன்பம் உண்டாகின்றது. மற்றவர்களுக்கும் அப்படிதான் உண்டாகும் - ஏதோ முண்டத்தை பார்பது போல நான் படைத்ததெல்லாம் பூர்ணத்துவமோ முடிவோ பெறாதவை. நான் விட்டுவிட்டுப் போவதும் அப்படித்தான் இருக்கும்.

இதில் அபூர்வமாக என்ன இருக்கிறது? மனித வர்கத்தின் விதி இது. அதிலிருந்து மனித முயற்சிகளோ, சாதனைகளோ தப்ப முடியாது. சாதிக்க முடியாதவற்றை சாதிக்க முயலும் ஒரு முயற்சிதான் வாழ்க்கை. அடையமுடியாதவையை அடயைமுயளுவது தான் மனிதப் பண்பாடு. இந்த அடைய முடியாத ஒன்று நம்முடைய சக்திக்கெல்லாம் அப்பாற்பட்டது.

பரப்ப முடியாத சிறகுகள் இருந்து என்ன பயன்? வெறும் சுமை. நம்மை அழுத்தும் சுமை. நாம் அதை இழுத்துக் கொண்டு கடைசியில் வெறுக்கத் தொடங்குகிறோம்.

பருந்துக்காரன் தன் கொடூர விளையாட்டிலே அலுத்துப் போய் நம் தலை மீது சல்லாவைப் போடும் போது நமக்கும் விமோசனம் வருகிறது.

Wednesday, December 11, 2013

காதல்

காதல் என்பது அழியக் கூடியது.
அழிந்தவுடன் மட்கிப் போய் புதிய காதலுக்கு மண்ணாக ஆகின்றது.
இந்தப் புதிய காதலில் மாய்ந்த காதல் தன் இரகசிய வாழ்க்கையை தொடர்ந்து நடத்துகிறது.
ஆகவே காதலுக்கு சாவே கிடையாது.

வெறுப்பு

நாம் யாரையாவது வெறுக்காவிட்டால் அவரைப் புரிந்து கொள்வது சிரமம்,
ஏனென்றால் நம்மிடம் சாதனங்கள் ஒன்றும் இருப்பதில்லை.
அவர்களுடைய உள்ளத்தைப் ஊடுருவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும்படியாக நமக்கு எந்த கருவியும் இல்லாமல் போய் விடுகின்றது.

Monday, December 9, 2013

ஆர்வம்

ஆர்வம்(enthusiasm) என்பது கிரேக்க சொல்லான enthusiasmos(அறிவுக்கூர்மை) என்கிற சொல்லின் மூலச் சொல் ஆகும.
அறிவுக்கூர்மை நிறைந்த ஒருவன் வெறுமனே உட்கார்ந்து கொண்டு நேரத்தை வீணாக்கி கொண்டும், விசயங்களைப் பற்றி கொதித்துக் கொண்டும் இருக்கமாட்டான். அவனுடைய விழிப்புணர்வினால்  அவன் இரயிலுக்கு முன்னால் நின்று கொண்டு, தடத்தில் என்ன வருகின்றது என்று கவனித்துக் கொண்டும், அப்படியே வந்தால் அதை எப்படி சந்திப்பது என்றும் நினைத்துக் கொண்டிருப்பான், இதுதான் அறிவுக்கூர்மை.
அறிவுக்கூர்மை நிரம்பிய செயல்முறைகள் உண்மையான பிரபஞ்சத்தை பார்பதற்கும், கேட்பதற்கும், உணர்வதற்கும் தேவையான நீண்ட அமைதி இருக்கும்போது நிகழக்கூடும்.
அறிவுக்கூர்மை என்பது ஆன்மிக எரிபொருள் போன்றது,
அதுதான் அனைத்தையும் நடத்திச் செல்கின்றது, அது நமக்கு கிடைக்கவில்லை என்றால் நம்மால் எந்த வழியிலும் எதையும் சரி செய்ய முடியாது. ஆனால் அது நமக்கு கிடைத்துவிட்ட பிறகு எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தெரிந்தால் இந்த உலகத்தில் எதாலும் நம்மை சரி செய்வதிலிருந்து தடுக்கமுடியாது.

Monday, December 2, 2013

சிக்கிக்கொள்ளுதல் / மாட்டிக்கொள்ளுதல்

நான் அடிக்கடி மாட்டிக்கொண்டு தவிப்பது  என்னிடம் உள்ள பொதுவான பிரச்சனைதான்.
வழக்கமாக நான் ஒரே நேரத்தில் நிறைய காரியங்கள் செய்ய நினைக்கும்போது இந்த மாதிரியான தவிப்பில் என் மனது மாட்டிக்கொள்ளும்.
கட்டாயம் சொற்கள் வரவேண்டும் என்று நான் முயற்ச்சி செய்யக்கூடாது, அப்படி செய்தால் இன்னும் அதிகமாக மாட்டிக்கொள்வேன்.
செய்யவேண்டிய விஷயங்களை பிரித்துக் கொண்டு அதற்குப் பிறகு ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்யவேண்டும்.
நான் என்ன சொல்லவேண்டும் என்று நினைப்பதோடு, எதை முதலில் சொல்ல வேண்டுமென்றும் என்று முயற்சிக்கிறேன் - இது கஷ்டம்.
ஆகையால் இவையிரண்டையும் பிரித்துக்கொள்ளவேண்டும், என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென்று நினைகிறேனோ அதை முதலில் எந்த முறையிலாவது படியலிட்டுக் கொள்ளனும். அதற்குப் பிறகு அதை நான் சரியான முறையில் வரிசைபடுத்திக் கொள்ளலாம்.