Tuesday, December 17, 2013

む (ம்யூ)

ம்யூ என்றால் "ஒன்றுமில்லை" என்று பொருள். "தர"தைப் போல இதுவும் இரட்டைத்தண்மை வேறுபடுத்தலுக்கு வெளியே உள்ள செயல்முறையைத்தான் குறிப்பிட்டுக் காட்டுகிறது. சாதாரணமாக ம்யூ என்றால், "பிரிவு இல்லை, ஒன்று இல்லை, ஆம் கிடையாது, இல்லை கிடையாது". அது சொல்வது என்னவென்றால் கேள்விக்கு பதிலாக ஆம் அல்லது இல்லை என்று இருந்தால் அது தவறு. அந்த மாதிரியான கேள்வியைக் கொடுக்கக்கூடாது இது சொல்வது என்னவென்றால் "கேள்வியைக் கேட்காமல் விடு" என்பதுதான்.
சூழ்நிலைவாதக் கேள்வி மிகவும் சிறிதாக இருக்கும் போது, அதனுடைய பதில் அதற்கேற்ற மாதிரி இருக்கும் அந்த நேரத்தில் ம்யூ மிகவும் சரியான சொல்லாகும். ஜென் குரு ஒருவரிடம் நாயிடத்தில் புத்தரின் இயல்பு இருக்கிறதா என்று கேட்டார்கள் அதற்கு அவர் ம்யூ என்றார். இதற்கு அர்த்தம் என்னவெனில் அவர் எப்படி பதில் சொன்னாலும் அது சரியானது இல்லை என்பதுதான். புத்தரின் இயல்பை ஆம் அல்லது இல்லை என்கிற கேள்வியின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது.
ம்யூ பதில் தரக்கூடிய எந்த பரிசோதனைகளையும் குறைவாக மதிப்பீடு செய்வது நியாயமற்றது.
ம்யூ பதில் மிகவும் முக்கியமான ஓன்றாகும். இயற்கையின் பதிலுக்கு விஞ்ஞானியின் கேள்விக்கான சூழ்நிலை மிகவும் சிறியது என்றும் கேள்விக்கான சூழ்நிலையை அவர் கொஞ்சம் விசாலமாக்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. இது மிகவும் முக்கியமான பதில் ஆகும். இயற்கை பற்றிய அவருடைய புரிதல் இதனால் பெரும் அளவில் மேம்பட்டது. இந்தப் பரிசோதனையின் முதல் குறிக்கோளே அதுதான். அறிவியல் ஆம்-இல்லை என்கிற பதில்களை விட ம்யூ பதில்களால் தான் அதிக வளர்ச்சியடையும் என்கிற வலுவான கூற்றை இதன் மூலம் உருவாக்கலாம் . ஆம்-இல்லை என்கிற பதில்கள் அனுமானத்தை உருதிப்படுத்தும் அல்லது நிராகரிக்கும் ஆனால் பதில் இதற்கும் அப்பால் இருக்கின்றது  என்று ம்யூ கூறுகிறது. ம்யூ ஒரு "கவனிக்கப்படவேண்டிய நிகழ்வு" முதலில் அது அறிவியல் பூர்வமான விசாரணைக்கு ஊக்கமளிக்கக்கூடியது ஆகும். இது மர்மமானதோ அல்லது சிலருக்கு மட்டுமே புரியக்கூடியதோ அல்ல. நம்முடைய பண்பாடு இது குறித்து குறைவாக எடைபோடும் படி ஆக்கிவிட்டது.

No comments:

Post a Comment