Thursday, December 12, 2013

கழுகின் விமோசனம்

மனித சிந்தனை சாதிப்பது மிக மிகக் குறைவு. அதன் இறக்கைகள் பலம் கொண்டவைதாம். ஆனால் அவற்றை நமக்கு அளித்த விதியைப் போல பலம் உள்ளவை அல்ல. தான் விரும்பியதற்கு அப்பால் நம்மை போக விடாது அது. நம் வாழ்கை பிரயானமானது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குறுகிய கால அலைச்சலில் நமக்கு இன்பமும், நம்பிக்கையும் உண்டாகின்றன. ஆனால் பருந்துக்காரர், கையிலுள்ள சங்கிலியால் பருந்தை இழுத்துக்கொள்வது போல நாமும் இழுத்துக்கொள்ளப்படுகிறோம். நாம் எப்போது சுதந்திரமடைவோம்? இந்தச் சங்கிலி என்று அறுபட்டு பரந்து வான்வெளியில் சுயேச்சையாக பறக்கும் அது?

பறக்குமா, பறக்காத? வாழ்க்கையின் இரகசியமே இந்த பந்தம் தானா? இது மாறி விட்டால் நாமும் மனிதர்களாக இருக்க மாட்டோம். நம்முடைய விதியே மாறிவிடும்.

ஆனாலும் எப்பொழுதுமே நாம் ஆகாச வெளியின் மயக்கில் கட்டுண்டு கிடக்கிறோம். அதற்கே உரியவர்களாக நம்மை நினைத்துக்கொண்டு விடுகிறோம். ஏதோ சத்தியம் போல அது தன்னைத் தானே நமக்கு முன் கண்பிதுக்கொள்கிறது.

நாம் அடைய முடியாத இந்த எல்லையற்ற வான்வெளி எதற்காக நம்மையும், நம் வாழ்வையும் சுற்றியுள்ள இந்த எல்லையில்லாத பரப்பின் அர்த்தம் என்ன? இதற்கிடையேயுள்ள நாம் ஏன் கையாலாகாத கைதிகளாக இருக்கிறோம்? ஏன் வாழ்க்கை தனக்குள் தானே சிறைபட்டுக் கிடக்கிறது? இந்த எல்லையில்லாத பரப்பினால் நமக்கு இன்பம் உண்டா? இல்லை என்றே தோன்றுகிறது. இன்பத்தை விட துன்பமே அதிகம்.

சத்தியத்தை தேடுகிறோம் என்பதற்காக நமக்கு சுகம் கிடைக்கிறதா? எனக்குத் தெரியாது. நான் தேடத்தான் தேடுகிறேன். என் வாழ்வு முழுவதும் ஓயாமல் தேடிக் கொண்டிருக்கிறேன். சில சமயம் நான் அதை கண்டுவிட்டேன்போல் தோன்றுகிறது. ஆனால் அதனுடைய எல்லையில்லாத ஒளி என் கண்ணை இன்னும்  நிரப்பவில்லை. நிரபினால் தான் நமக்கு எதுவும் நன்றாகப் புரியும். நாம் அதற்கு கொடுத்து வைக்கவில்லை. ஆகவே முயற்சிகளெல்லாம் வீண்தான். நான் தொட்டதெல்லாம் சிறிதளவு உண்மையாகவும் அரைகுரையாகவுமே இருக்கின்றன, என்னுடைய சிருஷ்டிகளை நினைக்கும்பொழுதே எனக்குத் துன்பம் உண்டாகின்றது. மற்றவர்களுக்கும் அப்படிதான் உண்டாகும் - ஏதோ முண்டத்தை பார்பது போல நான் படைத்ததெல்லாம் பூர்ணத்துவமோ முடிவோ பெறாதவை. நான் விட்டுவிட்டுப் போவதும் அப்படித்தான் இருக்கும்.

இதில் அபூர்வமாக என்ன இருக்கிறது? மனித வர்கத்தின் விதி இது. அதிலிருந்து மனித முயற்சிகளோ, சாதனைகளோ தப்ப முடியாது. சாதிக்க முடியாதவற்றை சாதிக்க முயலும் ஒரு முயற்சிதான் வாழ்க்கை. அடையமுடியாதவையை அடயைமுயளுவது தான் மனிதப் பண்பாடு. இந்த அடைய முடியாத ஒன்று நம்முடைய சக்திக்கெல்லாம் அப்பாற்பட்டது.

பரப்ப முடியாத சிறகுகள் இருந்து என்ன பயன்? வெறும் சுமை. நம்மை அழுத்தும் சுமை. நாம் அதை இழுத்துக் கொண்டு கடைசியில் வெறுக்கத் தொடங்குகிறோம்.

பருந்துக்காரன் தன் கொடூர விளையாட்டிலே அலுத்துப் போய் நம் தலை மீது சல்லாவைப் போடும் போது நமக்கும் விமோசனம் வருகிறது.

No comments:

Post a Comment